பத்துகேவ்ஸ், அக். 12-
அரசு 1000 இந்து ஆலயங்களுக்கு தலா RM 20,000 ரிங்கிட் மானியம் வழங்கவுள்ளதாக தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் அறிவித்திருந்தது வரவேற்கத்தக்கது என்று மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலய, அமைப்புகளின் தலைவர் டத்தோ ந.சிவக்குமார் தெரிவித்தார்,
இந்த மானியம் மூலம் 1,000 ஆலயங்களுடன் சமூக மக்களும் பயனடைய உள்ளனர். ஆகையால் இத்திட்டத்தை மஹிமா வரவேற்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசு வழங்கும் இந்த மானியம் ஆலயங்களின் மேம்பாட்டு பணிகளுக்கும் சமூக சேவைச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம்.
மேலும், அரசு வழங்கும் நிதியை ஆலய நிர்வாகங்கள் வெளிப்படைத்தன்மையுடன், சரியான நோக்கில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், அரசு வழங்கும் இந்நிதியை ஏற்காமல் சில தரப்பினர் மற்ற கோரிக்கைகளை முன் வைத்தால் அடுத்த முறை இந்நிதி ஆலயங்களுக்குக் கிடைக்காமல் போகும் சூழலும் உருவாகலாம் என்று டத்தோ ந.சிவக்குமார் மேலும் கூறினார்.
அத்துடன், அரசு வழங்கும் இந்நிதியை ஏற்காமல் சில தரப்பினர் பிற கோரிக்கைகளை முன்வைத்தால், அடுத்தமுறை இந்நிதி ஆலயங்களுக்கு வழங்கப்படாமல் போகும் சூழல் உருவாகலாம் என்று டத்தோ ந. சிவக்குமார் குறிப்பிட்டார்.
இதுபோன்ற அரசின் ஆதரவுடன் சமூக முன்னேற்றத் திட்டங்களை மஹிமா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.