ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நவராத்திரி விழாவில் 200 பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள்: வியாபாரி உபயத்தினர் அன்பளிப்புகள் வழங்கினர்

கோலாலம்பூர்:

தலைநகர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய நவராத்திரி விழாவில் 200 பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையுடன் நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் நேற்று வியாபாரி உபயத்தினரின் பூஜைகள் நடைபெற்றது.

இதில் முக்கிய அங்கமாக 200 பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

வியாபாரிகள் உபய நாட்டாமை டத்தோ ந. சிவக்குமார் இதனை வழங்கினார்.

இதில் அன்பு இல்ல பிள்ளைகள், தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த வசதிக் குறைந்த மாணவர்களும் அடங்குவர்,

அதே வேளையில் தனித்து வாழும் தாய்மார்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

வியாபாரி உபயத்தினரைச் சேர்ந்த கிருஷ்ணன், விக்னேஸ்வரா ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா இந்நிகழ்வுக்கு தலைமையேற்றதுடன் இந்த அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.

பிள்ளைகள் அனைவரும் இறைவனுடன் பெற்றோர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இந்த நம்பிக்கை அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று டத்தோ சிவக்குமார் தமதுரையில் கூறினார்.