பத்துமலை:
இந்து சமய, கலை, கலாச்சார பயிற்சித் திட்டங்களை டிஎஸ்கே குழுமம் தொடர்ந்து நடத்தும்.
மலேசிய சினார் காசே டைனமிக் குழுமத்தின் தலைவரும் தோற்றுநருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
டிஎஸ்கேவின் தேவாரம், பரதம் முடித்த மாணவர்களுக்கும் தைப்பூச விழாவின் போது பேருந்தில் தேவாரம் பாடும் மாணவர்களுக்கும் இன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 150 மாணவர்களுக்கு இன்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஒரு நாள் பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்குகிறார்கள் என சிலர் கூறலாம்.
ஆனால் நாங்கள் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதே வேளையில் ஒவ்வொரு பயிற்சியும் மூன்று மாதங்களுக்கு நடத்தப்பட்டு பின் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
ஆக சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என பாராட்டுகள்.
இந்து சமயத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.
ஆக இதுபோன்ற இந்து சமய, கலை, கலாச்சார பயிற்சித் திட்டங்களை டிஎஸ்கே குழுமம் தொடர்ந்து நடத்தும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
இதனிடையே டிஎஸ்கே குழுமத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் அதன் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவும் பெரும் ஆதரவாக உள்ளனர்.
இவ்வேளையில் டான்ஸ்ரீ நடராஜாவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக டத்தோ சிவக்குமார் கூறினார்.