பத்துமலை:
ஆயிரம் ஆலயங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலா 20,000 ரிங்கிட் மானியம் தகுதியான ஆலயங்களுக்கு சென்றடைய வேண்டும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.
சமூக மக்கள் பயன் பெறும் நோக்கில் இந்த மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் அதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும் என தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ளார்.
இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தவுள்ளது. ஆலயங்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படும் என்பது பற்றி மஹிமாவிற்கு தெரியாது.
ஆனால் இந்த மானியம் மூலம் 1,000 ஆலயங்களுடன் சமூக மக்களும் பயனடைய உள்ளனர்.
ஆகையால் இத்திட்டத்தை மஹிமா வரவேற்கிறது. அதே வேளையில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மஹிமா ஒரு கோரிக்கையை முன்வைக்கிறது.
அதாவது நாட்டில் பல ஆலயங்கள் அமைதியாகவும் இலவசமாகவும் பல சமூக சேவைகளை செய்து வருகின்றன.
ஆலயங்களுக்கான பயணத்தின் போது இதனை நான் கண்டறிந்தேன்.
இதுபோன்ற தகுதியான ஆலயங்களுக்கு இந்நிதி சென்றடைய வேண்டும்.
இது குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கவும் மஹிமா தயாராக உள்ளது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
நாட்டில் உள்ள ஆலயங்களை ஒன்றுப்படுத்தி மாபெரும் ஆலய மாநாட்டின் நடத்த வேண்டும் என்பதே மஹிமாவின் முதன்மை இலக்காக உள்ளது.
அவ்வகையில் இந்த மாநாடு அடுத்த ஆண்டு மாபெரும் அளவில் நடத்தப்படும்.
இதன் மூலம் ஆலய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பதுடன் ஆலயங்களின் குரல்களை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும் என்று அவர் கூறினார்.