கோல சிலாங்கூர்:
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகளுக்கு பின் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் கும்ப நீர் ஆலய கலசங்களுக்கு ஊற்றப்பட்டது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமாவின் தலைவருமான டத்தோ என். சிவகுமார் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.
ஆலயத் தலைவர், நிர்வாகத்தின் அன்பான அழைப்பின் பேரில் அவர் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
இந்த பிரம்மாண்டமான ஆன்மீக நிகழ்வு தெய்வீக சக்தி, பக்தியால் நிரம்பியிருந்தது.
இது ஆலயத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு அர்த்தமுள்ள மைல்கல்லைக் குறித்தது.
மேலும் மஹிமாவிம் உறுப்பினர் சான்றிதழ் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மங்களகரமான கும்பாபிஷேகம் அனைவருக்கும் நீடித்த அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தட்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.