பந்திங்:
மஹிமாவில் இணையும் ஆலயங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
நாட்டில் உள்ள ஆலயங்கள், இந்து அமைப்புகளை ஒரு குடையின் கீழ் இணைக்க வேண்டுன் என்ற நோக்கில் மஹிமா பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் நாட்டில் பல ஆலயங்கள் மஹிமாவில் இணைந்து வருகின்றன.
அவ்வகையில் பந்திங் ஸ்ரீ நாகக்காணி அம்மன் ஆலயம் தற்போது மஹிமாவில் இணைந்துள்ளது.
அவ்வாலயத்தின் தலைவர் கந்தசாமி, ஆலய இளைஞர்களின் அழைப்பைத் தொடர்ந்து ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்டேன்.
அதே வேளையில் மஹிமா உறுப்பினர் சான்றிதழை ஆலயத் தலைவரிடம் வழங்கப்பட்டது.
இந்த ஆலயத்தை மஹிமா குடும்பத்தில் அதிகாரப்பூர்வமாக வரவேற்றது.
மேலும் ஆலயங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்,
இந்து சமூகத்தை மேம்படுத்தவும் மஹிமாவின் நோக்கத்தை கோயில் தீவிரமாக ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.