பத்துமலை:
பத்துமலை மேல்குகையில் வெள்ளி ரத தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
பத்துமலை மேல்குகையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேலாயுதர் சுவாமிக்கு என சிறப்பு வெள்ளி ரதம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வெள்ளி ரதத்தின் தேரோட்டத்துடன் சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
அதே வேளையில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவக்குமார் முன்னிலையில் தேரோட்டம் நடைபெற்றது.
மேலும் பக்தர்கள் திரளாக இத்தேரோட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.