கோலாலம்பூர்:
ஆலய திருவிழாவில் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் நடவடிக்கைகளாகும்.
இதை மஹிமா வண்மையாக கண்டிக்கிறது என்று அதன் தலைவர் டத்தோ என். சிவக்குமார் சாடினார்.
பெஸ்தாரி ஜெயாவில் நடந்த ஆலய திருவிழாவின் போது ஒருவர் துப்பாக்கியை கொண்டு வானத்தை நோக்கி சுடுகிறார்.
இச்சம்பவம் அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பலர் கண்டனம் தெரிவிப்பதுடன் பல இதை பற்றி இழிவாகவும் கிண்டலாகவும் பேசுகின்றனர்.
இதனால் இந்து சமயத்திற்கும் அதன் நம்பிக்கைக்கும் தான் இழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஆக இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்கக் கூடாது. மேலும் இது நமது கலாச்சாரமும் அல்ல.
அதன் அடிப்படையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக இதற்கு காரணமானவர்களையும் போலிசார் அடையாளம் காண வேண்டும்.
மேலும் இவ்விவகாரத்தில் போலிசாரின் நடவடிக்கைகளுக்கு மஹிமா முழு ஆதரவு தரும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.