வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு வாடகை வீடு விளம்பரங்களில் இனப்பாகுபாடுகள் காட்டப்படுவது பெரும் வேதனையை அளிக்கிறது என்று மஹிமா தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக
எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக புக்கிட் பெண்டேராவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷர்லினா அப்துல் ரஷித் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் குரல் எழுப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்படி பட்ட அறிவிப்பு விளம்பரங்கள் நீண்ட காலமாக இருந்தாலும், மிகச் சில தலைவர்களே இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.
வேலை வாய்ப்புகள், வீடு வாடகைகளுக்கு வழங்குவதும் ஒரு குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பு வெளிப்பட்டையாக இப்போது அதிகளவில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
தங்கள் பணிகளைச் செய்வதில் புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் இருக்கும் பல பட்டதாரிகளுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சரியான வேலைகள் வழங்கப்படுவதில்லை.
இனம், மொழி காரணங்களால் தகுதியானவர்கள் ஒதுக்கித் தள்ளப்படுகிறார்கள்.
இதனால் பதவிகளை வகிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வாடகைக்கு வீடுகள், அறைகளைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கலுடன், உண்மையில் தேவைப்படுபவர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆகவே இந்த விவகாரத்தை இன்னும் துல்லியமான மட்டத்தில் விவாதிக்க ஷர்லினா நாடாளுமன்ற கூட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.