ஷாஆலம்:
நாட்டில் இந்து சமயத்தை இழிவுப்படுத்துபவர்களுக்கு எதிராக மஹிமா தொடர்ந்து குரல் கொடுக்கும்.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
இந்து சமயத்தையும் மக்களின் நம்பிக்கையையும் ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் ஆகியோர் இழிவுப்படுத்தினர்.
அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1000 போலிஸ் புகார்கள் செய்யப்பட்டன.
ஆனால் அவர்கள மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரம் இல்லை என சட்டத்துறை தலைவர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
சட்டத்துறை தலைவர் அலுவகத்தின் இந்த முடிவு நாட்டில் வசிக்கும் இந்து மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதே வேளையில் இவ்விவகாரத்திற்கு மஹிமா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் இந்து சமயத்தை இழிவுப்படுத்துபவர்களுக்கு எதிராக மஹிமா தொடர்ந்து குரல் கொடுக்கும்.
தேவைப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மஹிமா தயங்காது.
ஷாஆலம் மிட்லண்ட்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்ட டத்தோ சிவக்குமார் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
ஷாஆலம் வட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற இந்த ஆலய திருவிழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
அதே வேளையில் சமய வளர்ச்சி, சமுதாய ஒற்றுமைக்கான திட்டங்களை ஆலய நிர்வாகங்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.