புத்ரா ஹைட்ஸ் தேவி ஸ்ரீ மகா ராஜகாளியம்மன் ஆலயம் அதிகாரப்பூர்வமாக மஹிமாவில் இணைந்துள்ளது

சுபாங்:

புத்ரா ஹைட்ஸ் தேவி ஸ்ரீ மகா ராஜகாளியம்மன் ஆலயத்திற்கு மஹிமா உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

தேவி ஸ்ரீ மகா ராஜகாளியம்மன் ஆலயத்தின் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் கிருஷ்ணகுமாரின் அழைப்பின் பேரின் இவ்விழாவில் கலந்து கொண்டேன்.

இந்த வருகையின் போது, மஹிமா உறுப்பினர் சான்றிதழை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் இவ்வாலயம் அதிகாரப்பூர்வமாக மஹிமா குடும்பத்தில் இணைந்துள்ளது.

மேலும் மலைக்கு மேல் மிகவும் அழகாக இவ்வாலயம் அமைந்துள்ளது.

நிர்வாகத்தினர் இவ்வாலயத்தை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர்.

இவ்வேளையில் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

மேலும் ஆலயங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்து சமூகத்தை மேம்படுத்தவும் மஹிமாவின் நோக்கத்தை ஆலயம் தீவிரமாக ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன்.

அனைத்து பக்தர்களுக்கும் அவர்களின் அன்பான வருகை, தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.