தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நிகழ்வுகளுக்கு கல்வியமைச்சு மானியம் வழங்க வேண்டும்: டத்தோ கண்ணா சிவக்குமார் வலியுறுத்து

பத்துகேவ்ஸ்: ஜூலை 18-
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நிகழ்வுகளுக்கு கல்வியமைச்சு மானியம் வழங்க வேண்டும் என்று மஹிமா தலைவரும் டிஎஸ்கே குழுமத்தின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோம்பாக் மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா பத்துமலை தமிழ்ப்பள்ளியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. அதிகமான மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது என்று டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.

இதுபோன்ற விழாக்கள் மாணவர்களுக்கு பெரும் பயனாக உள்ளது. குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் திறமைகளை இதுபோன்ற விழாக்களின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

ஆக இதுபோன்ற விழாக்களுக்கு கல்வியமைச்சு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார். இதன் மூலம் இதுபோன்ற விழாக்கள் பரவலாக நடத்தப்படும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்..

மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் இவ்விழா வெற்றி பெற 10,000 ரிங்கிட் மானியம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.