நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள், அமைப்புகள் ஒரு குடையின் கீழ் இணைய வேன்டும்: டத்தோ சிவக்குமார்

குவாந்தான்:

நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள், அமைப்புகள் ஒரு குடையின் கீழ் இணைய வேன்டும்.

மஹிமாவின் தலைவர் டத்தோ சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

மஹிமா எனப்படும் இந்து ஆலயங்கள், அமைப்புகளின்  பேரவையின் தலைராக நான் பொறுப்பேற்றேன்.

இப்பதவியின் வாயிலாக இந்து ஆலயங்கள், அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது எனது முதன்மை இலக்காக உள்ளது.

இதன் அடிப்படையில் பகாங் மாநிலத்தில் நேற்றும் இன்றும் பல ஆலயங்களுக்கு சென்றேன்.

ஆலய நிர்வாகங்கள், அமைப்புகளுடன் சந்திப்பு கூட்டத்தை நடத்தினேன்.

ஆலய நிர்வாகங்கள், அமைப்புகல் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்தேன்.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இந்து ஆலயங்களும் அமைப்புகளுக்கு ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும்.

இதன் வாயிலாகவே நமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்