அம்பாங்:
எதிர்மறையான கருத்துகள் தான் எனது வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது.
ஆகையால் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்று மஇகா பொருளாளரான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு டிஎஸ்கே அமைப்பின் வாயிலாக பல உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம்.
இந்த உதவிகள் செய்யும் வீடியோக்களை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்தால் அதற்கு பல எதிர்மறையாக கருத்துகளால் தாக்கப்படுகிறேன்.
இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. இதுபோன்ற கருத்துகளால் நான் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் பேசுபவர்கள் அங்கே தான் உள்ளனர்.
ஆகையால், குறை கூறுபவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
மேலும் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மலேசிய ஶ்ரீ ஆதி சங்கரர் திருமடத்தின் ஏற்பாட்டில் 250 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வில் டத்தோ சிவக்குமார் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் மலேசிய ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்