தஞ்சோங் காராங்:
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சுங்கை தெராப் தமிழ்ப்பள்ளி தரமான பள்ளியாக உள்ளது.
மஇகா பொருளாளரும் டிஎஸ்கே அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
சுங்கை தெராப் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டத்தில் மகிழ்ச்சி.
டிஎஸ்கே அமைப்பின் வாயிலான பள்ளி மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் ஆகியோருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் இப்பள்ளியில் 40 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் எண்ணிக்கை குறையாக இருந்தாலும் இப்பள்ளி தரமான பள்ளியாக உள்ளது.
இவ்வேளையில் தலைமையாசிரியர் கன்னியம்மாள் உட்பட பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப்பள்ளிகள் நாம் பாதுகாக்க வேண்டும். குறைந்த மாணவர்கள் இருந்தாலும் இப்பள்ளி தொடர்ச்சியாக செயல்பட வேண்டும்.
இது தான் எனது எதிர்பார்ப்பு என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கிய டத்தோ சிவக்குமார் உட்பட அனைவருக்கும் பள்ளி வாரியக் குழுத் தலைவர் செல்லையா நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதனிடையே தஞ்சோங் காராங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் இன்று உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு பார்வைக்கு கொண்டு செல்வேன்.
அதே வேளையில் இப்பகுதி மக்கள் பாப்பாராயுடுவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வேன்.
மஹிமா பொருளாளர் நாராயணசாமியுடன் இணைந்து இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்