ஆலயங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் மாபெரும் மாநாடு; மஹிமா எந்த இயக்கத்திற்கும் போட்டி அல்ல: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

நாட்டில் உள்ள ஆலயங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் மாபெரும் மாநாடு மஹிமா ஏற்பாட்டில் நடைபெறும்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

மஹிமா எனப்படும் மலேசியா இந்து ஆலய அமைப்புகளின் பேரவை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

இந்த பேரவை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். ஆகையால் இதற்கு புதிய  தலைமைத்துவம் அமையப்பட வேண்டும் எனது நோக்கமாக இருந்தது.

அதன் அடிப்படையில்தான் இன்றைய ஆண்டு கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தேர்வு நடைபெற்றது.

இதில் டத்தோ ந. சிவக்குமார் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேரவையின் நடவடிக்கைகளை அவர்தான் இனி அவர் தான் முன்னெடுப்பார்.

அவருக்கும் மஹிமாக்கும் நானும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானமும் என்றுமே உறுதுணையாக இருக்கும்.

மஹிமா எந்த சமய இயக்கத்திற்கும் போட்டியாக அமைக்கப்பட்ட அமைப்பு அல்ல.

நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள், அமைப்புகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்பதுதான் மஹிமாவின் முக்கிய முக்கிய நோக்கமாக உள்ளது.

இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு மாபெரும் மாநாடு ஒன்றை மஹிமா நடத்த உள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்