காஜாங்:
பிள்ளைகள், பெற்றோர்களை அன்பு இல்லங்களில் விட்டதோடு கடமை முடிந்து விடவில்லை.
அவர்களை அவ்வப்போது சென்று பாருங்கள் என்று டிஎஸ்கே சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் வலியுறுத்தினார்.
தீபாவளியை முன்னிட்டு அன்பு இல்லங்களுக்கு டிஎஸ்கே இயக்கத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இன்று காஜாங்கில் உள்ள பேரீபு காசே அன்பு இல்லத்திற்கு வந்தோம்.
இங்கு 40க்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர். 10க்கும் மேற்பட்ட முதியவர்கள் உள்ளனர்.
காஜாங் சிறைச்சாலை, போலிஸ் நிலையம், மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விடப்படுகின்றனர்.
அதே வேளையில் பெற்றோர் தங்களின் பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களின் பெற்றோரையும் இங்கு விட்டுச் செல்கின்றனர்.
அவர்களை இங்கு விட்டு சென்றதுடன் கடமை முடிந்து விட்டது என அனைவரும் போய்விடுகின்றனர்.
திரும்பி வந்து பார்ப்பதே இல்லை என்று இங்குள்ளவர் கூறியது எனக்கு பெரும் வேதனையை அளிக்கிறது.
அன்பு இல்லங்களில் அன்புக்குரியவர்களை விட்டுச் செல்பவர்கள் அவர்களை அடிக்கடி வந்து பார்க்க வேண்டும். இது தான் எனது வேண்டுகோள்.
அதே வேளையில் டிஎஸ்கே குழுவினரின் நடவடிக்கைகளை பலர் கேலி செய்கின்றனர்.
எங்களை கேலி செய்வதற்கு பயிலாக இங்குள்ளவர்களை வந்து பார்த்து அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்