பத்துமலை தைப்பூச விழாவிற்காக ஆற்றங்கரை சுத்தப்படுத்தும் நடவடிக்கை குறித்து செலயாங் நகராண்மை கழகத்துடன் விவாதிக்கப்பட்டது: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

பத்துமலை தைப்பூச விழாவிற்காக ஆற்றங்கரை சுத்தப்படுத்துவது குறித்து செலயாங் நகராண்மை கழகத்துடன் இன்று விவாதிக்கப்பட்டது.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ என். சிவக்குமார் இதனை கூறினார்.

தைப்பூச விழா அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படவுள்ளது.

மலேசியாவில் தாய்கோவிலாக விளங்கும் பத்துமலையில் இத்தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

கிட்டத்தட்ட பல லட்சம் பேர் இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் முன்கூட்டியே நடத்தப்படும்.

இதில் ஆற்றங்கரையில் பக்தர்களின் வசதிகள் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அவ்வகையில் ஆற்றங்கரை சுத்தப்படுத்துவது குறித்து செலயாங் நகராண்மை கழக அதிகாரிகளுடன் இன்று விவாதிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள், அமலாக்க அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்