வாயால் சொன்னால் மட்டும் போதாது; உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: டத்தோ சிவக்குமார்

ஷாஆலம்:

வாயால் சொன்னால் மட்டும் போதாது. உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

தனேஸ் பிரபு இயக்கத்தில் டாக்டர் கேஸ் வில்லன்ஸ் தயாரித்து நடித்துள்ள வீர கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

வரும் மார்ச் 5ஆம் தேதி முதல் இத்திரைப்படம் மலேசிய திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இதன் சிறப்பு காட்சியை பார்த்ததில் மகிழ்ச்சி. இத்திரைப்படம் மிகவும் தரமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

மலேசிய திரைப்படங்களும் தரமாக வெளி வருகிறது என்பது இத்திரைப்படம் ஓர் உதாரணமாகும்.

இத்திரைப்படம் இறுதியில் ஒரு முக்கிய காட்சியும் வசனமும் உள்ளது.

இதற்காகவே மக்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

குறிப்பாக திரையரங்குகளுக்கு வந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு தருவோம் என வாயால் சொன்னால் மட்டும் போதாது.

அக்கலைஞர்களின் திரைப்படங்கள் வரும் போது மக்கள் திரையரங்குகளுக்கு சென்று ஆதரவு தர வேண்டும்.

திரையரங்குகளின் வசூல் தான் இத்திரைப்படத்தின் வெற்றியாகும்.

ஆக மக்கள் இத்திரைப்படத்திற்கு முழு ஆதரவு தர வேண்டும் என டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.