பத்துமலை:
நமது நாட்டுப்புறப் பாரம்பரியக் கலைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
மஹிமா தலைவரும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
கொங்கு ஒயிலாட்டக் குழுவினர் பத்துமலையில் சிறப்பு ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் படைப்புகளை வழங்கினர்.
மலேசிய கொங்கு நலனபிவிருத்தி மன்றத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ் நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 150 கலைஞர்களுடன் மலேசிய வந்துள்ள இக்குழுவினர் பத்துமலையில் இந்த படைப்புகளை வழங்கினர்.
காலை 8 மணி முதல் மதியம் வரை அக்கலைஞர்கள் தங்களின் படைப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பேசிய டத்தோ சிவக்குமார்,
தமிழ் நாட்டில் இருந்து 150க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பத்துமலைக்கு வந்து தங்களின் நாட்டுப்புற நடனத்தை மக்கள் முன்னிலையில் ஆடினர்.
இது நாட்டுப்புறப் பாரம்பரியக் கலைகள் மீது அவர்கள் கொண்டுருக்கும் நேசத்தை காட்டுகிறது.
இவ்வேளையில் அக்குழுவினருக்கு எனது பாராட்டுகள்.
இதுபோன்று நாட்டுப்புறப் பாரம்பரியக் கலைகள் தொடர்ந்து
பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு உரிய ஆதரவை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவும் நானும் வழங்குவோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்